நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அக்னி-5 ஏவுகணைச் சோதனை வெற்றி

5,000 கி.மீ வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணைச் சோதனை வியாழக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:00 pm

Raghavendran

இந்திய பாதுகாப்புத்துறையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய வகையில் அக்னி ஏவுகணை தயாரிக்கப்பட்டு அது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இதுவரை 4 வகையிலான அக்னி ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து தற்போது அக்னி-5 சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

கடந்த 1960-களில் இருந்து அக்னி வகை ஏவுகணைகளின் தயாரிப்பு நடந்து வருகிறது. இவற்றில் 2012-ம் ஆண்டு அக்னி-1, 2013-ல் அக்னி-2, 2015-ல் அக்னி-3, 2016-ல் அக்னி-4 ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள அக்னி-5 வகை ஏவுகணை 5,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் தன்மை கொண்டது. இவை 1.5 டன் எடை கொண்டதாகும்.

டிஆர்டிஓ-வில் தயாரிக்கப்பட்டுள்ள அக்னி-5 ஏவுகணையை ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து சோதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.