மஹாநதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹிராகுத் அணை திறக்கப்பட உள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஸாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள மஹாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் குறுக்கே அமைந்துள்ள ஹிராகுத் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து அந்த அணையின் 25 மதகுகளையும் செவ்வாய்கிழமை மாலை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விநாடிக்கு 4 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படவுள்ளது.
இந்நிலையில், வெளியேறும் நீரின் அளவு 6 லட்சம் கன அடியாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வியாழக்கிழமை இதன் அளவு 8 லட்சம் கன அடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வெளியேற்றப்படும் நீரின் அளவு 8 முதல் 8.5 கன அடியாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் உஷார் நிலையில் இருக்குமாறு அம்மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிறப்பு நிவாரணப்பிரிவு ஆணையர் பிஷ்னுபண்டா சேதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக சாம்பல்பூர், சோனேபூர், பௌத், நயாகர், அங்குல், கட்டக், பூரி, ஜகத்சிங்பூர், குர்தா மற்றும் ஜஜ்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் போதுமான அளவு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் போதுமான அளவு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சலந்தி நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாத்ராக் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


