ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் குஜராத் மாநிலத்தின் சூரத் ரயில் நிலையத்துக்கு 3வது இடம் கிடைக்க உள்ளது.
ரூ.1 லட்சம் கோடி ரயில் நிலைய மேம்பாடு திட்டத்தின் கீழ், விமான நிலையங்களில் இருப்பதை போன்ற வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக சூரத் ரயில் நிலையம் உருவாக உள்ளது.
ஐஆர்எஸ்டிசி, சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன், குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றிடம் வந்த பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.
இந்த ரயில் நிலையம், விமான நிலையத்தின் தரத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவில் வரும் 2020ம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில், விமான நிலையத்தில் இருப்பதைப் போன்ற பல வசதிகள் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்படும்.
இதில் மத்திய, மாநில, உள்ளாட்சி நிர்வாகங்கள் என மூன்று நிலையிலான அரசுகள் இணைந்து செயல்படும்.
இந்த ரயில் நிலையம், பேருந்து நிலையத்தையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட உள்ளது. 900 வாகனங்கள் நிறுத்தக் கூடிய வாகன நிறுத்துமிடங்கள், 5 மேம்பாலங்கள் கூடியதாக அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் 3,49,684 பயணிகள் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் ஹபிப்கஞ்ச் மற்றும் குஜராத்தின் காந்திநகர் ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டில் தயாராகிவிடும்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் மேலும் 3 ரயில் நிலையங்களை விமான நிலையங்களைப் போல மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


