கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா?
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் 29 மாநிலங்கள், 7 ஒன்றிய ஆளுமைப் பகுதிகளில் 13 மாநிலங்களில் நேரடியாகவும், 5 மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடனும் இணைந்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.
மிúஸாரம், மேகாலயா, ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகம், புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.
இவற்றில் மிúஸாரம், மேகாலயா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மூன்றிலும் காங்கிரஸை தோற்கடித்துவிட்டால் 'காங்கிரஸ் இல்லா இந்தியா' என்ற இலக்கை நெருங்கிவிடலாம் என்று பாஜக கணக்கிட்டுள்ளது.
மிகப் பெரிய மாநிலமான கர்நாடகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இங்கு பெரும்பான்மையாக வாழும் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை, பாஜக மாநிலத் தலைவராக்கி, முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து, தேர்தல் பரப்புரை பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 150 இடங்களைக் கைப்பற்றப்போவதாக இலக்கு நிர்ணயித்துள்ள பாஜகவின் பரப்புரையின் வீச்சு, உத்தி, சமூக வலைதளங்களில் காட்டும் ஆளுமை வாக்காளர்களை எளிதில் ஈர்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள்கருதுகிறார்கள்.
132 ஆண்டு கால வரலாறு கொண்ட கட்சியை அழிவில் இருந்து காக்கும் வகையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி, காங்கிரஸுக்கு தவிர்க்க முடியாமல் தேவைப்படுகிறது.
கட்சியின் மறுமலர்ச்சிக்கு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி எத்தனை விலை கொடுத்தாவது பெற வேண்டியது என்பதை காங்கிரஸ் அறிந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடியின் பேச்சுத் திறனையும், வசீகரத்தையும் ஈடு செய்வதற்குத் தேர்தல் பரப்புரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர்த்தி பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்திரா காந்தியை நினைவூட்டுபவராக பிரியங்கா இருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் நம்புகிறார்கள். து+ப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு 33 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும் இந்திரா காந்தியின் ஆட்சிமுறை, கொண்டுவந்த திட்டங்கள், அதிர வைத்த முடிவுகளை கர்நாடக மக்கள் மறக்கவில்லை.
1977-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி இந்திரா காந்தியின் அரசியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. வெவ்வேறு அரசியல் சூழ்நிலைகளில் காங்கிரஸை கர்நாடக மக்கள் ஆதரித்தே வந்துள்ளனர்.
மோடிக்கு அவ்வப்போது தகுந்த பதிலடிகொடுத்துவரும் பிரியங்கா காந்தி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடி தருவார் என்று காங்கிரஸார் நம்புகிறார்கள்.
இதற்கு முன்பு நடந்துள்ள பல்வேறு தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பிரியங்கா காந்தி பரப்புரையில் ஈடுபட்டிருந்தாலும், கட்சியில் அவர் அங்கம் வகித்ததில்லை. அடுத்த இரு மாதங்களில் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை வழங்கி, கர்நாடகத் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியங்கா தலைமையில் தேர்தல் நடந்தால் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிடும் என்று நம்பி, அவரிடம் கர்நாடக மாநிலத் தலைவர்கள் விவாதித்து ஒப்புதலையும் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தியில் இந்திராகாந்தியை காணும் கர்நாடக மக்களின் நம்பிக்கையை பெற காங்கிரஸ் அவரை முழுநேர அரசியலுக்கு இழுக்க முற்பட்டுள்ளது.
கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்கு பிரியங்கா வருவாரா? ராகுலின் முயற்சிக்கு தோள் கொடுப்பாரா? காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடி தந்து, கட்சியின் மறுமலர்ச்சிக்கு வித்திடுவாரா? என்ற கேள்விகளுக்கு மக்களும், காலமும்தான் பதில் சொல்ல வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...