புதுதில்லி: கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க மனைவியைச் சுட்டுக் கொன்று விட்டு, கூலிப்படையினரால் அவள் கொல்லப்பட்டதாக கணவன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
தில்லியின் பகர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா. இவரது மனைவி ப்ரியா மெஹ்ரா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் தங்களது காரில் செவ்வாய் இரவு ஷாலிமர் பாக் என்னும் பகுதியில் உள்ள சீக்கிய குருத்துவரா ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத நபர்களால் ப்ரியா சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பங்கஜும் , அவரது இரண்டு வயது மகனும் தப்பி விட்டனர்.
ஆனால் ப்ரியா மருத்துவமனையில் இறந்தே கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் மருத்துவமனை மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் ப்ரியா உயிர் இழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மருத்துவமனையில் ப்ரியா அனுமதிக்கப்பட்ட பொழுது போலீசார் வந்த பின்னர்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் காலம் தாழ்த்தினர் என்றும், அதே நேரத்தில் தங்களது எல்லை வரம்பிற்கு உட்படவில்லை என்று முதலில் போலீஸாரும் வர மறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் ப்ரியாவின் கணவர் பங்கஜ்ஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது வியாபார வளர்ச்சிக்காக சிலரிடம் கடன் பெற்றிருந்ததாகவும், அதனை உரிய காலத்தில் திரும்பிச் செலுத்த தவறியதால் கடன் கொடுத்தவர்கள் கூலிப்படை மூலம் அவர் மீது நடத்த முயன்ற தாக்குதலில், ப்ரியா பலியாகி விட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தில்லி காவல்துறை இணை ஆணையர் மிலிந்த் மஹாதேவ் தும்ப்ரே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
பங்கஜ் மெஹ்ரா தனது தொழில் வளர்ச்சிக்காக கடன் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால் அதனை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், தனது மனைவியைக் கொன்று அந்தச் சந்தேகம் கடன் கொடுத்தவர்கள் மேல் விழ வைக்க எண்ணினார். அதற்காக திட்டம் தீட்டி இந்தச் செயலைச் செய்துள்ளார். அவருக்கு இன்னொரு மனைவியும் உள்ளார். தொடர்ந்த விசாரணையின் இறுதியில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். தற்பொழுது கொலைக்கான ஆயுதத்தினை கைப்பற்ற அவருடன் போலீசார் சென்றுள்ளனர்.
இவ்வாறு தும்ப்ரே தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


