லக்னௌ: தொடர் சர்ச்சைகளால் எழுந்துள்ள சூழலை சரிசெய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26-ஆம் தேதி தாஜ்மஹலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்ததை ஒட்டி மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தாஜ்மஹல் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. அத்துடன் மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்தும் தாஜ்மஹலை நீக்கி மாநில அரசு உத்தரவிட்ட விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் சமீபத்தில் மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநிலத்தின் சர்தானா தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ சங்கீத் சோம், 'தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை' என்று பேசியது மீண்டும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இத்தகைய காரணங்களால் பாஜக அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. அத்தத்துடன் சமூக வலைத்தளங்களிலும் கண்டங்கள் குவிகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
தாஜ்மஹல் யாரால் கட்டப்பட்டது, யாருக்காக கட்டப்பட்டது என்பது முக்கியம் அல்ல. அது இந்திய தொழிலாளர்களின் ரத்ததாலும் வியர்வையாலும் கட்டப்பட்டது. காதலின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹல் சுற்றுலாத்துறை கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள் உண்டாக்கிக் தருவதும், பாதுகாப்பினை உறுதி செய்வதும் நமது முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் தொடர் சர்ச்சைகளால் எழுந்துள்ள சூழலை சரிசெய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வரும் 26-ஆம் தேதி தாஜ்மஹல், ஆக்ரா கோட்டை மற்றும் பதேபூர் சிக்ரி உள்ளிட்ட நினைவிடங்களுக்கு செல்ல உள்ளார் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


