டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரூ.70-க்காக 10-ம் வகுப்பு மாணவிகளின் ஆடையைக் களையச் செய்த தலைமை ஆசிரியர்

10-ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடையை தலைமை ஆசிரியர் களையச் செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:02 pm

Raghavendran

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தாமோ என்ற இடத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளின் ஆடையை தலைமை ஆசிரியர் களையச் செய்த கொடூரம் சனிக்கிழமை நடந்தது.

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் ரூ.70 காணாமல் போனதாக தலைமை ஆசிரியரிடம் அம்மாணவி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த வகுப்பு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், அதே வகுப்பில் பயிலும் சக மாணவிகள் இருவரிடம் சோதனை செய்ய அவர்களின் ஆடையைக் களையுமாறு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

அந்தப் பணத்தை தாங்கள் இருவரும் திருடியதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். அதற்கு சம்மதிக்காத காரணத்தால் அவ்வாறு செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் கவனத்துக்கு இவ்விவகாரம் சென்றுள்ளது. 

எனவே இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கல்வித்துறை அதிகாரி உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.