பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அரசியல்வாதிகள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2017, 11:04 am

புதுதில்லி: நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டு நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், 'கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின்படி நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது 1,581 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்பொழுது அந்த வழக்குகளின் நிலை என்ன? அத்துடன் அதற்குப் பிறகு அரசியல்வாதிகள்மீது எதனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது? என்று கேள்விகளை எழுப்பினர்     

அத்துடன் நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதன் மூலமே அந்த வழக்குகளின் விசாரணையை தீவிரப்படுத்த முடியும் என்று நீதின்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான செயல் திட்டம் மற்றும் நிதி ஆதார ஒதுக்கீடு குறித்து திட்ட அறிக்கையினை ஆறு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் , வழக்கை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.