தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காசோலை பணமின்றி திரும்பினால் பிணையில்லா சிறை: சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை வழங்கி, அது பௌன்ஸ் செய்யப்பட்டால், காசோலை வழங்கியவரை சிறையில் தள்ளும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2017, 10:50 am


வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை வழங்கி, அது பௌன்ஸ் செய்யப்பட்டால், காசோலை வழங்கியவரை சிறையில் தள்ளும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காசோலை மோசடிக்கு தற்போதிருக்கும் தண்டனையை திருத்தி, பிணையில்லாத சிறைத் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் காசோலை மோசடி தொடர்பாக பதிவு செய்யப்படும் 20 லட்சம் வழக்குகளை குறைக்கும் வகையில் மத்திய சட்ட மற்றும் சீர்திருத்தத் துறை இந்த சட்ட மசோதாவை வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளது.

புதிய சட்ட திருத்த மசோதாவில், காசோலை பவுன்ஸ் செய்யப்பட்டால் அது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக நீதிமன்றத்துக்கு வரும். அங்கே, நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை தீர்த்துக் கொள்ள இரு தரப்புக்கும் கால அவகாசம் ஒதுக்கப்படும். தவறினால், காசோலை கொடுத்தவர் சிறைக்கு அனுப்பப்படுவார். ஜாமீன் வழங்க கடும் நிபந்தனை விதிக்கப்படும்.

அதோடு, காசோலையில் குறிப்பிட்ட தொகையை, குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.