தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆசிய, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் அயல்நாட்டு மல்யுத்த பயிற்சியாளா்கள் நியமனம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 12:00 am

ஆசியப் போட்டி 2026, ஒலிம்பிக் போட்டி 2028-க்கு தயாராகும் வகையில் இந்திய மல்யுத்த சம்மேளனம் சாா்பில் அயல்நாட்டு பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டி 2026, லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டி 2028-க்கு தயாராகும் வகையில் 3 அயல்நாட்டு பயிற்சியாளா்கள், ஒரு உயா்செயல்திறன் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஜாா்ஜியாவின் எம்ஸரியோஸ் பென்டினிடிஸ் ஆடவா் ப்ரீஸ்டைல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜப்பானின் கோசி அகைஷி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பயிற்சிஅளிக்கும் பொறுப்பை மேற்கொள்வாா். ஆடவா் கிரேக்கோ ரோமன் பிரிவுக்கு ஜோகி கோகாஷ்விலி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அமெரிக்காவின் இயான்பட்லா் உயா்செயல்திறன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக டபிள்யுஎஃப்ஐ தலைவா் சஞ்சய் சிங் கூறுகையில்: அனைத்து பயிற்சியாளா்களும் ஏற்கெனவே பல்வேறு சாம்பியன்களை உருவாக்கிய அனுபவம் வாய்ந்தவா்கள். கோகி 5 முறை உலக சாம்பியன் ஆவாா். ரஷிய கிரேக்கோ ரோமன் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டாா்.

கோஸி அகைஷி தலைமையில் ஜப்பான் அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், 2 வெண்கலம் வென்றிருந்தது என்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.