தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பள்ளித் தேர்வு முறைகேடு: மாநிலத்தின் பெயரைக் கெடுக்கும் பிகாரிகள் - நிதிஷ்குமார் சாடல்

பிகார் மக்களே மாநிலத்தின் நற்பெயரைக் கெடுப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2017, 9:17 am


பாட்னா: பிகார் மக்களே மாநிலத்தின் நற்பெயரைக் கெடுப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

பிகாரில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பள்ளித் தேர்வில் முதலிடம் பிடிக்க முறைகேடு நடந்தது தெரிய வந்தது. 

கலைப்பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த மாணவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் நிதிஷ் குமார், "வெளியில் இருப்பவர்களால் அல்ல, பிகார் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்க அம்மாநில மக்களே மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.

நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் பள்ளிக் கல்வித் தேர்வில் கலைப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமார், அடிப்படைக் கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதையடுத்து சுமார் 65 சதவீதம் பேர் தோல்வி அடைந்த இந்த தேர்வில் முதலிடம் பிடித்த கணேஷ் குமார் கைது செய்யப்பட்டார். பல லட்சக் கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பிகார் மாநில கல்வித் துறைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.