தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கொல்கத்தாவில் புதிய பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி?

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

கொல்கத்தா : கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

வடக்கு கொல்கத்தாவில் கணேஷ் திரையரங்கு அருகே புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலில், பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், ஏராளமான வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.

இச்சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 10 வரை இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 100 பேர் வரை சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள வாகனங்களிலிருந்து கசிந்த எரிபொருள் மூலம் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பு தூண்கள் அப்படியே கீழே விழுந்ததால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.