கொல்கத்தா: கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கொல்கத்தாவின் மொத்த விற்பனை மையமாக திகழும் புராபஸார் பகுதியில் ரபீந்திர சாரணி மற்றும் கே.கே.தாகூர் சாலைகளை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ. தூரத்துக்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் பாலம் கட்டுமான நடைபெற்ற பகுதிகளில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதி என்பதால், இடிந்து விழுந்த பகுதியில் 100க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். ஏராளமமான வாகனங்களும் பாலத்துக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அவைகளும் பலத்த சேமதடைந்தன.
இந்த விபத்தில் இதுவரை 18 பேர் வரை இறந்துள்ளதாக மேற்குவங்க மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்த 62 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம், இந்த விபத்தை 'கடவுளின் செயல்' என வர்ணித்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் 300 ராணுவ வீரர்கள் அடங்கிய 4 படையினரும், பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு மிதினாபுர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா, அதை ரத்து செய்துவிட்டு கொல்கத்தா திரும்புகிறார்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.
விபத்து குறித்து கேள்விபட்ட வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரமதர் மோடி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே விபத்து குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


