பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஸ்ஐஎஸ் அனுதாபி கைது

தேசிய புலனாய்வு துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியை நேற்று கைது செய்தனர்.

News image
Updated On :17 மார்ச் 2016, 9:20 am

தேசிய புலனாய்வு துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியை நேற்று கைது செய்தனர்.

இராக், சிரியா, லிபியா நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் வகையில் பயங்கரவாத அமைப்பு (ஐஎஸ்ஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.

இந்த நாடுகளில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சார்பில் போரிடுவதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.

இந்தியாவிலும் சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். சிலர் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்திய இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பவர்களை கண்டுபிடித்து, மத்திய புலனாய்வு துறையினர் கைது செய்து வருகின்றனர். அதன்படி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் அகம்மது என்ற ராஜவை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். அவர் தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.