2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அண்ணே நீங்க வாசிங்க! நான் தூங்கனும்: கோவா பேரவையில் தூங்கிய எம்எல்ஏ

கோவா மாநில சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் தூங்கிவிட்டார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:48 pm

PTI

கோவா மாநில சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் தூங்கிவிட்டார். இதுதொடர்பாக முதல்வருக்கும் அந்த சுயேச்சை எம்எல்ஏ-வுக்கும் பேரவையில் இன்று கடும் வாக்குவாதம் எழுந்தது.

சலிப்பு ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்தால் தூங்காமல் என்ன செய்வது? என்று அப்போது சம்பந்தப்பட்ட எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.

கோவா சட்டப் பேரவையில், எதிர்வரும் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை முதல்வரும், மாநில நிதித் துறை அமைச்சருமான லட்சுமிகாந்த் பர்சேகர் நேற்று தாக்கல் செய்தார். அப்போது சுயேச்சை எம்எல்ஏ விஜய் சர்தேசாய் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இதுதொடர்பான விடியோ காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், இன்று சட்டப் பேரவை தொடங்கியவுடன் இந்த விவகாரம் குறித்து முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் பேசினார்.

சம்பந்தப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ-வை சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர், அவரது நடவடிக்கையை விமர்சித்து கருத்து தெரிவித்தார். "பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கும் வரை உங்களால் (விஜய் சர்தேசாய்) நின்று கொண்டே இருக்க முடியாது என்பது எனக்குத் தெரிகிறது; ஆனால், இருக்கையில் அமர்ந்தால் நீங்கள் தூங்கிவிடுகிறீர்களே' என்றும் அவர் கூறினார்.

அதற்கு பதிலளித்த விஜய் சர்தேசாய், "கோவா அரசு தாக்கல் செய்த பட்ஜெட் சலிப்பை ஏற்படுத்தியது; இதுபோன்ற பட்ஜெட் உரையை வாசிக்கும்போது தூக்கம் வந்தால், அது எனது தவறல்ல' என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய லட்சுமிகாந்த் பர்சேகர், "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அது; மாறாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை மகிழ்விப்பதற்காக தாக்கல் செய்யவில்லை' என்றார்.

கோவா முதல்வருக்கும், சுயேச்சை எம்எல்ஏ-வுக்கும் இடையே கருத்து மோதல் மூண்டது பேரவையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.