குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் : பிரதமர் பாராட்டு

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:44 pm

PTI

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பெருமை கொள்கிறோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

இப்போது 1,425 கிலோ எடை கொண்ட 6-ஆவது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப், பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவியது இஸ்ரோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.