தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில தேர்தல்களில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறினார்.
இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
நான் ஏற்கெனவே குறிப்பிட்டப்படி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. தற்போது நான் மாணவராக இருக்கிறேன். என்னுடைய ஆராய்ச்சி படிப்புக்குப் பின் ஆசிரியராகவே விரும்புகிறேன். அதுவரை நாட்டில் நிலவும் முக்கியமான விவகாரங்களுக்காக போராடவே விரும்புகிறேன்.
என்னுடைய இரு நண்பர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. ரோஹித் வேமூலா விவகாரம் முதல் அலகாபாத் பல்கலைக்கழக விவகாரம் வரை நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். மாணவர்களுக்காக பல்வேறு பிரச்னைகளில் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதனால், நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பிரசாரத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை அனுமதி கிடைப்பது எவ்வளவு அரிதானது என்பது நாட்டில் உள்ள மக்கள் அனைவருமே அறிவர். இங்குள்ள மாணவர்கள் படிக்காமல் போராட்டம் நடத்தி வருவதாக கூறுவது தவறானது. 'படிப்போம்-போராடுவோம்' என்பதே எங்களது பிரதான நோக்கமாகும். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் அறிவார்ந்த மாணவர்களின் செயல்பாடுகளை கண்டு அஞ்சுவோரே நாங்கள் அரசியல் செய்வதாக கூறுகின்றனர்.
இலவசமாக விளம்பரம் தேடுவதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுவது குறித்து பேசிய கன்னையா குமார், அமைச்சர் நாயுடுவும் ஆரம்பகாலத்தில் ஏபிவிபி சார்பில் ஆந்திர பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்’ வைப்பு

ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

915.17 மெட்ரிக் டன் சரக்குகள்: இலக்கை விஞ்சிய 12 துறைமுகங்கள் - மத்திய அமைச்சா் பெருமிதம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


