கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளை கண்காணிக்க விரிவான சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பாருலேக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவா மாநில சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் எழுப்பியிருந்த கேள்விக்கு, பாருலேக்கர் எழுத்துப்பூர்வமாக அளித்திருந்த பதில் பின்வருமாறு:
கோவா மாநில கடற்கரைகளை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் விரிவான சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்த ரூ 3.61 கோடி ஒதுக்கபப்ட்டுள்ளது.
மேலும் கோவா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மாநில கடற்கரைகளை முழுமையான மின்னணு கண்காணிப்பு முறைக்கு கொண்டு வர திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த திட்டம் சுற்றுலா அமைச்சகத்தின் "ஸ்வதேஷ் தர்ஷன்" திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல், கடற்கரைகளில் இலவச வைஃபை வசதி மற்றும் கண்காணிப்பு மையங்கள் ஆகியவை உண்டாக்காப்படும்.
மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 'கோவா எலெக்ட்ரானிகிஸ் லிமிடட் ' இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாகா, கலங்கூட், கண்டோலிம், வகடோர் மற்றும் அஞ்சுனா ஆகிய கடற்கரைகளில் முதல்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
கண்காணிப்பு மைங்கள் சுற்றுலாத்துறை அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் செயல்படும்
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


