ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குலுமணாலியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
குறிப்பிட்ட அந்தப் பெண் சில நாட்களுக்கு முன்புதான் குலுமணாலிக்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.இது தொடர்பாக காவல்துறையிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
மணாலியில் என்னை விட்டு விட்டு எனது நண்பர்கள் ஸ்பிட்டி வேலி பகுதியில் உள்ள காசா என்னும் இடத்திற்கு பயணம் சென்று விட்டனர். ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியே பயணம் செய்வதற்கு டாக்ஸி கிடைக்காத காரணத்தால் அவ்வழியே வந்த ஒரு வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றேன், அந்த வாகனத்தில் ஆறு ஆண்களிருந்தனர். அவர்களில் இருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். மணாலியின் தனியான ஒரு வெளிப்புறப் பகுதிக்கு என்னை அழைத்து சென்ற அவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் என்னைஅவர்கள் மணாலியில் விட்டு விட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை விசாரணை அலுவலர் காந்தி ராம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார்.
அதே சமயத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தைச் சேர்ந்த, அக்சய் ராணா மற்றும் பங்கஜ் சர்மா ஆகிய இருவர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் மாநில டிஜிபி சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை அலுவலர் காந்தி ராம் மேலும் கூறியதாவது:
மணாலி மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டது. அந்த பெண் மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டும் என்ற விரும்பியதால் ஞாயிறு இரவு மண்டி நகர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் இன்னும் குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை. அதே நேரம் குற்றம் நடந்த சரியான இடத்தையும் அவரால் நினைவு கூற இயலவில்லை. சம்பவ இடத்திலிருந்து காவல் துறை தடயங்களையும் , அருகில் உள்ள இடங்களில் இருந்து சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


