பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மேக் இன் அஸ்ஸாம் திட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ்: ராகுல்

கோல்பாரா: அஸ்ஸாமில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தி மேக் இன் அஸ்ஸாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று ராகுல் தெரிவித்தார்.

Updated On :4 ஏப்ரல் 2016, 10:46 am

கோல்பாரா: அஸ்ஸாமில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தி மேக் இன் அஸ்ஸாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று ராகுல் தெரிவித்தார்.

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரப்பொதுக் கூட்டம் கோல்பாராவில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஏழை மக்களின் நலன்கள், வளர்ச்சி மீது காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது. அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மேக் இன் அஸ்ஸாம் திட்டத்தை செயல்படுத்த தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசு உறுதிபூண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசுகிறார். ஆனால், நாங்கள் அஸ்ஸாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம். அதைத்தான் கடந்த 15 ஆண்டுகளாக அஸ்ஸாமில் நாங்கள் செய்து வருகிறோம்.

அஸ்ஸாமில் அமைதியை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். தனிநபர் வருமான அளவை அதிகரிக்கச் செய்ததும் காங்கிரஸ்தான் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.