பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மல்லையாவுக்கு மீண்டும் சம்மன்; ஏப். 9ல் ஆஜராக உத்தரவு

அமலாக்கத் துறை சார்பில் விஜய் மல்லையாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 9 ஆம் தேதி அவர் மும்பையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்

News image
Updated On :2 ஏப்ரல் 2016, 11:56 am

புது தில்லி: அமலாக்கத் துறை சார்பில் விஜய் மல்லையாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 9 ஆம் தேதி அவர் மும்பையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாத வழக்குக் குறித்து மும்பை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மல்லையாவுக்கு ஏற்கெனவே இருமுறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

எனினும் நேரில் ஆஜராகுவதிலிருந்து, மே மாதம் வரை விலக்கு அளிக்குமாறு மல்லையா வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் அவரது வேண்டுகோளை அமலாக்கத் துறை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், அமலாக்கத் துறை இன்று மூன்றாவது சம்மனை மல்லையாவுக்கு அனுப்பியுள்ளது. அதில், ஏப்ரல் 9 ஆம் தேதி மும்பையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி வழக்குகளில் மூன்று முறைக்கு மேல் சம்மன் அனுப்பப்படுவதில்லை. எனவே, மல்லையாவுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சம்மன் கடைசியாக இருக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.