ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நவம்பர் 3ம் தேதி முதல் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சிறப்பு ரயில்

வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வரும் நவம்பர் 3ம் தேதி முதல் தேவி கட்ரா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

PTI

வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வரும் நவம்பர் 3ம் தேதி முதல் தேவி கட்ரா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர் 3ம் தேதி முதல் புது தில்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா - புது தில்லி வாராந்திர சிறப்பு ஏசி விரைவு ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7.50க்கு  தில்லியில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 8.20 மணிக்கு கட்ரா ரயில் நிலையத்தை அடையும்.

மறுநாள் காலை 5.40 மணியளவில் இந்த சிறப்பு ரயில் கட்ராவில் இருந்து புறப்பட்டு தில்லி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் 17ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.