15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காஷ்மீரில் ராணுவ முகாமுக்குள் நுழைந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பயங்கர ஆயுங்களுடன் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.

News image
Updated On :25 நவம்பர் 2015, 9:04 am

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பயங்கர ஆயுங்களுடன் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.

குப்புவாரா மாவட்டம், தாங்தர் நகரில் உள்ளது கோர்கா ரைஃபில் ஆயுதப் படை முகாம். இங்கு அதிகாலை 6.15 மணிக்கு நுழைந்த மூன்று தீவிரவாதிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தினர்.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் மீது, ராணுவத்தினர் திருப்பி தாக்கினர். ஏழு மணி நேர கடுமையான சண்டைக்குப் பிறகு அந்த மூன்று தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இத்தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவரும் இறந்ததாக ராணுவ வட்டாரங்கள் கூறின.

தீவிரவாதிகள் சிறிய ரக கைத்துப்பாக்கிகளையும், துப்பாக்கி மூலம் கிரானைட் தாக்குதல் நடத்தும் ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல் நடத்தியதாக, குப்புவாரா மாவட்டத்தின் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் இசாஜ் அகமது கூறினார்.

குப்புவாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் பகுதி இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு அருகே இருப்பதால், இவ்வழியாக தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து விடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.