சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன், ஆனால் இந்தியாவைவிட்டு வெளியேற மாட்டேன்: ஆமிர்கான்

சகிப்பின்மை குறித்து தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன், ஆனால் இந்தியாவைவிட்டு வெளியேற மாட்டேன். இந்தியனாய் இருப்பதற்கு பெருமைபடுகிறேன் எனஆமிர்கான் கூறியுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

PTI

சகிப்பின்மை குறித்து தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன், ஆனால் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன். இந்தியனாய் இருப்பதற்கு பெருமைபடுகிறேன் என ஆமிர்கான் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, ஆமிர்கான் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்தார்.   நாடு முழுவதிலும் இருந்தும் அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

முதலில் நான் தெரிவிப்பது என்னவென்றால், எனக்கோ எனது மனைவிக்கோ நாட்டை விட்டுவெளியேறும் எண்ணமில்லை என்றார் ஆமிர்கான். மேலும் நாங்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் இல்லை. இனி வெளியேற போவதுமில்லை என்றார்.

எனது கருத்துக்கு எதிர்வினை ஆற்றுவோர் எனது பேட்டியை முழுமையாக கவனிக்காமல் வேண்டுமென்றே திரித்து கூறுகின்றனர்.

இந்தியா எனது தாய்நாடு, அதை நான் நேசிக்கிறேன், இந்தியனாய் இருப்பதற்கு பெருமைபடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

எனினும், சகிப்பின்மை குறித்து தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ள ஆமிர்கான், இதற்காக நான் யாருடைய ஒப்புதல் அல்லது அனுமதி பெற தேவையில்லை என்றார்.

தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமீர் கான், இந்தியாவில் நிலவும் சகிப்பின்மையால், நாட்டை விட்டு வெளியேறி விடலாமா அவரது மனைவி கிரண் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

நாட்டில் அமைதியின்மை அதிகரித்து வருவதாலும், குழந்தைகளின் பாதுகாப்பை கருதியும் கிரண் இவ்வாறு கூறியதாக அமீர் கான் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.