15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

உச்ச நீதிமன்ற நீதிபதியாக டி.எஸ். தாக்குரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு: டிச. 3-ல் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்குரை நியமித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உத்தரவிட்டுள்ளார். அவர் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி பதவியேற்கிறார்.

News image
Updated On :18 நவம்பர் 2015, 1:50 pm

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்குரை நியமித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உத்தரவிட்டுள்ளார். அவர் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி பதவியேற்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.தத்துவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, தனக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு டி.எஸ்.தாக்குரின் பெயரை மத்திய அரசுக்கு எச்.எல்.தத்து அண்மையில் பரிந்துரைத்தார். இதை பரிசீலித்த பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்குரை நியமித்து குடியரசு தலைவர் இன்று உத்தரவிட்டார். அவர் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி பதவியேற்கிறார்.

கடந்த 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்த தாகுர், 1990 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.  பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர் 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.