குடிபோதையில் பெண்ணை பலாத்காரம் செய்த மும்பை காவலர் கைது
மும்பை காவல்துறையில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவர், குடிபோதையில் ஒரு பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த குற்றத்துக்காக


மும்பை காவல்துறையில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவர், குடிபோதையில் ஒரு பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த குற்றத்துக்காக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தேரியின் மோரல் பகுதியில், ஒரு பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்ததாக தலைமைக் காவலர் பிரவீன் நலவாடே மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவரை நேற்று இரவு உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மும்பை காவல்துறை இணை ஆணையர் தேவன் பாரதி நடவடிக்கை எடுத்தார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நேரிட்டதாகவும், சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு குரல் கொடுக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்த பெண்ணை மீட்டு, தலைமைக் காவலரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...