கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தில்லி மெட்ரோ ரயில்: மகளிர் பெட்டியை இடமாற்றம் செய்ய மேனகா காந்தி யோசனை

தில்லி மெட்ரோ ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கவிருக்கும் நிலையில், மகளிர் பெட்டியை இடமாற்றம் செய்யுமாறு மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி யோசனை வழங்கியுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:55 am

PTI

தில்லி மெட்ரோ ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கவிருக்கும் நிலையில், மகளிர் பெட்டியை இடமாற்றம் செய்யுமாறு மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி யோசனை வழங்கியுள்ளார்.

மெட்ரோ ரயிலில் தற்போதிருக்கும் கடைசிப் பெட்டியில் இருந்து மாற்றி, ரயிலின் நடுப் பெட்டிகளில் மகளிருக்கான பெட்டியை ஒதுக்கித் தர வேண்டும் என்று மேனகா யோசனை அளித்துள்ளார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மேனகா காந்தி இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் கழகத்துக்கும் கடிதம் எழுதவிருப்பதாகக் கூறியுள்ளார்.

தற்போதிருக்கும் விதிப்படி, மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டியை மகளிருக்காக ஒதுக்க வேண்டும். ஒன்று அதனை முதல் பெட்டியாகவோ அல்லது கடைசிப் பெட்டியாகவோ இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.