தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜார்கண்ட் பேரவை இடைத் தேர்தல்: காங்கிரஸ் வெற்றி

ஜார்கண்ட் மாநிலம் லோகர்டாகா பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 8:50 am

ஜார்கண்ட் மாநிலம் லோகர்டாகா பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜார்கண்ட் மாநில பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி.

இக்கூட்டணியைச் சேர்ந்த 'ஆல் ஜார்கண்ட் ஸ்டூடன்ட் யூனியன்' கட்சியைச் சேர்ந்த கமல் கிஷோர் பகத், லோகர்டாகா பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு மருத்துவர் ஒருவரை தாக்கிய வழக்கில் கமல் கிஷோருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பதவி பறிக்கப்பட்டால், அத்தொகுதியில் டிசம்பர் 14 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

இத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில், ஜார்கண்ட் மாநிலத் தலைவர் சுகதோ பகத்தும், பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான 'ஆல் ஜார்கண்ட் ஸ்டூடன்ட் யூனியன்' சார்பில் பதவி பறிக்கப்பட்ட கமல் கிஷோரின் மனைவி நீரு சாந்தியும் போட்டியினர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் 73,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாந்திக்கு 50,571 வாக்குகள் கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.