தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

நிதி முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் குறித்த விவரங்களையும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :16 டிசம்பர் 2015, 2:01 pm

நிதி முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் குறித்த விவரங்களையும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிதி முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் தகவல்களை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் அளித்த உத்தரவை எதிர்த்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகள், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.ஓய்.இக்பால் மற்றும் சி.நாகப்பன் ஆகியோர், நிதி முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிகள், நிதிநிறுவனங்கள் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும்.

நம்பிக்கை என்ற போர்வையின் கீழ் நிதிநிறுவனங்கள் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி மறைக்கக் கூடாது.

பொதுமக்கள் கேட்கும் தகவல்களை இரு நிறுவனங்களுக்கு இடையேயான 'நம்பிக்கையான உறவு',  'பொருளாதார பலன்' என்ற போர்வையில் வழங்காமல் இருப்பது ரிசர்வ் வங்கி குறித்து பொதுமக்கள் இடையே ஒரு சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையும் ஏற்படுத்தும்.

தகவல் உரிமை சட்டத்தின் படி, ரிசர்வ் வங்கி சோதனையின் போது கைப்பற்றப்படும் ஆவனங்கள், வழங்கப்படும் அறிக்கைகள்  ஆகியவை 'தகவல்கள்'  என்ற அடிப்படையில் அனைவருக்கும் வழங்கலாம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.