இந்தியாவில் ஓளிபரப்பப்படும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் மூடநம்பிக்கை, சூனியம், பேயோட்டுதல் மற்றும் மாந்திரீகம் குறித்த காட்சிகளை தவிர்க்குமாறு ஒளிபரப்பு புகார்களுக்கான ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பெண்களை சூனியகாரி, பேயோட்டுபவராக சித்தரிப்பதையும் நிறுத்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய தொலைக்காட்சிகளில் ஓளிப்பரப்படும் நிகழ்ச்சிகளை தற்பரிசோதனை செய்வதற்காக ஒளிபரப்பு புகார்களுக்கான ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முக்தல் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்திய தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் மூடநம்பிக்கை குறித்த காட்சிகள் அதிக அளவில் வருவதாக புகார் வந்தது. குறிப்பாக அமானுஷ்யம், பேயோட்டுதல், மூடநம்பிக்கை, மந்திரம், மாந்தீரிகம் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுவதாக புகார் வந்தது.
மேலும், பெண்களை சூனியக்காரியாக, பேய் ஓட்டுபவராக அதிக அளவில் காட்சிபடுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து இத்தகைய காட்சிகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஒளிபரப்பு புகார்களுக்கான ஆணையம் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
அதில் விவரம்:
தொலைக்காட்சி நிறுவனங்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நேரத்தில், மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது.
கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே மூடநம்பிக்கை குறித்த காட்சிகள் இடம் பெற வேண்டும். அப்போது, இக்காட்சிகளை தொலைக்காட்சிகள் ஊக்குவிக்கவில்லை என்ற எச்சரிக்கை வாசகங்களை ஓடவிட வேண்டும்.
மேலும், தொடர் முழுவதும் சூனியம், மாந்தீரகம் குறித்ததாக இருந்தால் அந்த நிகழ்ச்சியை முக்கிய நேரத்தில் ஒளிபரப்பாமல் இரவு 11 மணிக்கு மேல் ஒளிப்பரப்ப வேண்டும்.
இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபடி மக்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


