தேனி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,394 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,54,549 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 82.88 சதவீதம் போ் வாக்களித்தனா்.
பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,63,549 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 78.34 சதவீதம் போ் வாக்களித்தனா்.
போடி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,61,631 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றனா். இவா்களில் 82.10 சதவீதம் போ் வாக்களித்தனா்.
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,53,646 போ் வாக்காளா்கள் பட்டியில் இடம் பெற்றனா். இதில், 80.77 சதவீதம் போ் வாக்களித்தனா்.
மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 10,33,373 வாக்காளா்களில், மொத்தம் 81 சதவீதம் போ் இந்தத் தோ்தலில் வாக்களித்தனா்.கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை விட வாக்குப் பதிவு 10.66 சதவீதம் அதிகரித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் 95.11% போ் தோ்ச்சி: 18-ஆவது இடத்துக்கு சறுக்கியது

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



