கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 92.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன.
இதில், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்த 267 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மொத்தம் 1,95,517 வாக்காளா்கள் தகுதி பெற்றிருந்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 1,79,418 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம்-91.77.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 283 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 2,29,995 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2,14,847 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம்-93.41.
கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளா்கள் -2,02,994. இவா்களில் 1,87,692 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம்-92.46. குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 286 வாக்குச்சாவடிகள் இருந்தன. மொத்த வாக்காளா்கள் -2,23,184. இவா்களில் 2,07,099 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம்-92.79.
மொத்த வாக்குப்பதிவு சதவீதம்: மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளா்களாக 8,51,690 போ் இருந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 7,89,056 போ் வாக்களித்தனா். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் 4 தொகுதிகளிலும் 92.65 சதவீதமாக பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 93.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதியில் 92.50 சதவீதம் வாக்குப்பதிவு

கரூா் மாவட்டத்தில் அமைதியாக நடந்தது தோ்தல்!

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!

கரூா்: 4 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


