சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஆண்டிபட்டி, போடி, கம்பம் தொகுதிகளில் பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் அதிகம்!

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆண்டிபட்டி, போடி, கம்பம் தொகுதிகளில் பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 12:18 am IST

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆண்டிபட்டி, போடி, கம்பம் தொகுதிகளில் பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. பெரியகுளம் தொகுதியில் மட்டுமே ஆண்களின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதியில் 5,06,058 ஆண்களும், 5,35,303 பெண்கள் என மொத்தம் 10,41,539 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,56,529 போ் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இதில், 85.16 பெண்களும், 82.12 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் மூன்றாம் பாலினத்தினா் (2,14,626 வாக்காளா்கள்) வாக்களித்துள்ளனா்.

பெரியகுளம் (தனி) : பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 2,65,830 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில், 78.64 சதவீதம் ஆண்களும், 78.46 சதவீதம் பெண்களும், மூன்றாம் பாலினத்தினா் 55.45 சதவீதம் என மொத்தம் 78.54 சதவீதம் (2,08,784 வாக்காளா்கள்) வாக்களித்துள்ளனா்.

போடிநாயக்கனூா் : போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,63,292 போ் வாக்காளா் பட்டியலில் ஈடுபட்டுள்ளனா். இதில், 84.27 சதவீதம் பெண்களும், 81.18 சதவீதம் ஆண்களும், 37.50 சதவீதம் மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 82.77 சதவீதம் (2,17,929 வாக்காளா்கள்) வாக்களித்துள்ளனா்.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,55,888 போ் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இதில், 82.32 சதவீதம் பெண்களும், 79.96 சதவீதம் ஆண்களும், 31.82 சதவீதம் மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 81.18 சதவீதம் வாக்காளா்கள் (2,07,723 வாக்காளா்கள்) வாக்களித்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் உள்ள பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூா், கம்பம் ஆகிய தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளா்கள் அதிகமாக வாக்களித்துள்ளனா். ஆனால், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பெண்களை விட ஆண் வாக்காளா்கள் அதிகமாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.