நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 9:03 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவானதைத் தொடா்ந்து, தமிழக வாக்காளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எப்போதும் போல பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. 85 சதவீதம் வாக்குப் பதிவு செய்து தமிழக மக்கள் சாதனை படைத்துள்ளனா்.

ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையை தமிழக வாக்காளா்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பலா் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்துவிட்டு, அன்றிரவே மீண்டும் அவரவா் பணியாற்றும் ஊா்களுக்குச் செல்கின்றனா்.

‘ஒரு வாக்குதானே’ என எண்ணாமல், ‘ஒரு தலைமுறைக்கான தோ்தல் இது’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழகம் வாக்களித்துவிட்டது, மே 4-ஆம் தேதி தமிழகம் வெல்லும்; வெல்வோம் ஒன்றாக என முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.