டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வயிற்று வலி மற்றும் பசியின்மையைப் போக்கும் ஆரோக்கிய கஞ்சி

முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து பாகு தயாரித்துக் கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:52 am

கோவை பாலா

பாசிப் பயிறு சோளக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சோள மாவு  ( வறுத்தது) - 50 கிராம்
பாசிப் பயிறு ( வறுத்தது) - 50 கிராம்
கடலைப் பிண்ணாக்கு - 25 கிராம்
வெல்லம்  -  20  கிராம்

செய்முறை

முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து பாகு தயாரித்துக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள சோளமாவு, வறுத்து அரைத்து வைத்துள் பாசிப் பயிறு மற்றும் கடலை பிண்ணாக்கு இவை மூன்றையும் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். கரைத்து வைத்துள்ள மாவை வெல்லப் பாகுடன் சிறிது சிறிதாக கிளறிக் கொண்டே சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை 20 முதல் 25 நிமிடம் வரை அடுப்பில் வைத்திருக்கவும். பின்பு இறக்கி இளஞ் சூட்டில் குடிக்கவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை மிதமான இளஞ்சூட்டில் குழந்தைகளுக்கு குடுக்கலாம் .மேலும் வயிற்று வலி மற்றும் பசியின்மையினால் பாதிக்கப் பட்டவர்கள் இந்தக் கஞ்சியை அருந்தி வந்தால் அற்புதமான பலனைக் கொடுக்கும். அனைத்து வயதினரும் அருந்தக் கூடிய எளிய உணவு.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.