முருங்கை இலை கேழ்வரகு கஞ்சி
தேவையான பொருட்கள்
முருங்கை இலை - 2 கைப்பிடி
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வேர்கடலை வறுத்து பொடித்தது - 50 கிராம்
தண்ணீர் - அரை லிட்டர்
செய்முறை : முதலில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து ஒரு 15 நிமிடம் கிளறிக் கொண்டே கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனுடன் கேழ்வரகு மாவைக் கலந்து கிளறி ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும். நன்கு வெந்து நிறம் மாறி இரண்டும் நன்றாக கலந்தப் பின்பு முருங்கை இலையைப் போட்டு கிளற வேண்டும். முருங்கை இலை வெந்ததும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி விடவும்.
பயன்கள் : எலும்பு மற்றும் நரம்பு வலு குன்றியவர்கள் இந்த கஞ்சியில் இரண்டு அல்லது மூன்று துளி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்தும் அல்லது தேவையான அளவு நாட்டுச் சர்க்கரைச் சேர்த்தோ குடித்து வந்தால் எலும்புகளும், நரம்புகளும் வலுவடையும். மேலும் வயிறு உப்புசம் மற்றும் தீராத மலக்கட்டு பிரச்னைகளை தீர்க்கும் அற்புதமான ஆரோக்கிய கஞ்சி.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்: லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை!

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

