டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இதயம் ஏற்றம், இறக்கம் மற்றும் சமநிலை இல்லாமல் துடிக்கிறதா? இதோ தீர்வு!

வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:59 pm

கோவை பாலா


சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

தீர்வு : பிஞ்சு வெண்டைக்காயை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து  காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தலா மூன்று வெண்டைக்காய் வீதம் சாப்பிட்டு வரவும். மதிய வேளை உணவில் வெண்டைக்காயை நீராவியில் வேக வைத்து அதனுடன் சீரகம் மற்றும் முருங்கை விதையை பவுடராக்கி சேர்த்து கலந்து பொறியல் செய்து சாப்பிட்டு வரவும்.

ஜாதிக்காய் (5 கிராம்) பொடி எடுத்து அதனுடன் புதிதாக நெல்லிக்காய்ச் சாறு அரைத்து  ஒரு மேஜைக் கரண்டியளவு எடுத்து இரண்டையும் இரவு வேளை  கலந்து சாப்பிட்டு வந்தால்   ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.