தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

22.3.1976: பாங்கு கொள்ளையில் யு.எஸ். கோடீஸ்வரரின் மகள் குற்றவாளி!

பாங்கு கொள்ளையில் யு.எஸ். கோடீஸ்வரரின் மகள் குற்றவாளி...

News image

22.3.1976

Updated On :21 மார்ச் 2026, 10:30 pm

சான் பிரான்சிஸ்கோ, மார்ச். 21 - அரசியல் காரணமாக கடத்தப்பட்டவரும், ஹெர்ஸ்ட் பத்திரிகைக் கம்பெனி நடத்தும் கோடிஸ்வரர் ராண்டல்ப் ஹெர்ஸ்டின் மகளுமான பாட்ரிகா ஹெர்ஸ்ட், 10,690 டாலர் பாங்கு கொள்ளை வழக்கில் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

1974 ஏப்ரலில் நடந்த பாங்கு கொள்ளையில் கொரில்லா கடத்ததல்காரர்களுக்கு மனபூர்வமாக இவர் உதவியிருப்பதாகவும் தீர்ப்பு கூறுகிறது. பாட்ரிகாவுக்கு 35 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

ஏற்கெனவே பாட்ரிகா (வயது 22) அனுபவித்த சிறை தண்டனைக்குட்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்று அரசு தரப்பு வக்கீல் ஜேம்ஸ் பிரௌனிங் ஜூனியர் நிருபர்களிடம் கூறினார். சுமார் 12 மணி நேரம் ஆலோசித்த பிறகு 7 பெண்கள் உள்பட 12 ஜூரிகள், பாட்ரிகா குற்றவாளி என்று தீர்ப்பு கூறினர்.

பாங்கு கொள்ளையில் ஈடுபடவில்லை எனில், தன்னைக் கடத்திய சிம்பியோனிஸ் விடுதலை இயக்க கடத்தல்காரர்கள் கொன்று விடுவதாக மிரட்டியதாக பாட்ரிகா கூறியதை ஜூரிகள் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

நீதிபதி ஏப்ரல் 19௨ தீர்ப்பளிப்பார். ஏற்கெனவே இதுவரை பாட்ரிகா 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

தென் ரயில்வேயின் டிக்கட் சோதனை - ரூ 1.16 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, மார்ச். 20 - தென் ரயில்வே மார்ச் 1 லிருந்து 10 வரை நடத்திய டிக்கெட் பரிசோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, 9361 நபர்களிடமிருந்து ரூ.1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

113 நபர்கள் மீது ரயில்வே மாஜிஸ்டிரேட் கோர்ட்களில் வழக்குத் தொடரப்பட்டது. அவர்களில் 86 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மார்ச் 1 லிருந்து 10 வரை கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை ரூ. 1.52 கோடி. சென்ற வருடம் இதே காலத்தில் விற்பனை ரூ. 1.36 கோடி.

Summary

22.3.1976: U.S. billionaire's daughter convicted in bank robbery!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.