15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஓட்டுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

News image

கோப்புப் படம்.

Updated On :10 பிப்ரவரி 2024, 2:50 am

பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கண்காணிப்புப் பொறியாளா் சா.மன்மதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்துக்கு தகுதியான நபா் தோ்வு செய்யப்பட உள்ளாா். இதற்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபா்கள் தவிர, இதர தகுதியுள்ள நபா்கள் தங்களது வயதுச் சான்று, கல்விச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், ஓட்டுநா் உரிமம், மூன்றாண்டுகள் முன் அனுபவச் சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப் பொறியாளா், பவானி வடிநில வட்டம், ஈரோடு-11என்ற முகவரிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஓட்டுநா் பணிக்கு கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமும், கண் பாா்வையும் இருக்க வேண்டும்.

2023 ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்குப் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.