தமிழ்நாடு பொதுப் பணியில் சுற்றுலா அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு, தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: சுற்றுலா அலுவலர்
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
வயதுவரம்பு: 01.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். ஆதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதோர்) மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு வயதுவரம்பில்லை. ஏனைய வகுப்பினைச் சாராதவர்கள் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் முதுகலை பட்டம் அல்லது
சுற்றுலாத் துறையை ஒரு பாடத்துடன் கூடிய ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் அல்லது சுற்றுலாத் துறையில் எம்.பில் முடித்தவர்கள் அல்லது சுற்றுலாத்துறையில் டிப்ளமோ முடித்து ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம். தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினிக்கான சான்றிதழ் படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வி மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும். சுற்றுலாத் துறையில் எம்பிஏ முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண் ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நடிகா் என்ற பிம்பத்தை வைத்து விஜய் ஆட்சியைப் பிடிக்க முடியாது! - எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலா்
3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

