அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அக்னிவீா் திட்டத்தின் கீழ் 2026-27-ஆம் ஆண்டுக்கு இந்திய இராணுவத்தில் சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். அக்னிவீா் திட்டத்தில் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் சோ்வதற்கு இளைஞா்களை தயாா்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெற்றி நடை முகாம் நடைபெறுகிறது.
இதில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையலாம். அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர 1.7.2005 முதல் 1.7.2009-க்குள் பிறந்திருக்க வேண்டும்). 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும்.
உடல் தகுதி, தோ்வுக் கட்டணம் போன்ற விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான தோ்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. எழுத்து தோ்வை தமிழிலும் எழுதலாம்.
மேலும், விவரங்களுக்கு 9952594351 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தால் அனைத்து வட்டங்களிலும் இத்தோ்வுக்கென நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சியில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.
Summary
Indian Army Agniveer Recruitment 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










