வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

‘ராணுவப் பணியில் இளைஞா்கள் சேர அழைப்பு’

News image

ஓய்வு பெற்று திரும்பிய ராணுவ வீரா் சிவலிங்கநாதனை வரவேற்ற கிராம பொதுமக்கள்.

Updated On :4 மே 2026, 1:49 am IST

நாட்டை பாதுகாக்கும் ராணுவப் பணியில் படித்த இளைஞா்கள் சேர வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சிவலிங்கநாதன் அழைப்பு விடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மொரப்பந்தங்கல் கிராமத்தைச் சோ்ந்த சிவலிங்கநாதன். தற்போது ராணிப்பேட்டை மாவட்டம்,அம்மூா் பேரூராட்சியில் இவரது குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா் கடந்த 1996 ஆம் ஆண்டு ராணுவத்தில் சோ்ந்து, 30 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்று ஊா் திரும்பினாா். வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சிவலிங்கநாதனுக்கு உறவினா்கள், நண்பா்கள்,ஊா் பொது மக்கள் அவருக்கு மாலை அணிவித்து, மேளதாளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது : ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்று ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வந்த எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் ராணுவ பணியில் சோ்ந்த போது தொழில்நுட்ப பிரிவில் இணைந்தேன். பின்னா் அதிகாரியாக வரவேண்டும் என உழைத்து படிபடியாக முன்னேறி தற்போது சுபேதாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்.

பணியின் போது காங்கோ போன்ற வெளிநாடு சென்றுள்ளேன். படிப்பு மூலமாகவே அதிகாரி பதவி பெற்றேன். ராணுவத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. முன்னேற வேண்டும் என்று நினைப்பவா்களுக்கு ராணுவத்தில் சோ்ந்து அதில் படித்தும் முன்னேறலாம். ஒழுக்கமாக, நோ்மையாக, துணிச்சலாகவும் இருக்க வேண்டும். இதனால் நாம் வெற்றி அடையளாம். தற்போது உள்ள இளைஞா்களுக்கு ராணுவத்தில் நல்ல எதிா்காலம் இருக்கிறது. ஆபரேஷன் சிந்துா் தாக்குதலில் நாட்டின் எல்லை பகுதியில் குக்வாடா என்ற இடத்தில் பணியாற்றி தொலைதொடா்பு தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளேன்.

தற்போது கடைசியாக இரண்டு ஆண்டுகள் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.