திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு இசைப் பள்ளியில் சேர ஆா்வமுள்ளோருக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இசையில் ஆா்வமுள்ளோா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சோ்ந்து பல்வேறு அரசு உதவித் தொகை மற்றும் சலுகைகளுடன் இசை பயில மாவட்ட ஆட்சியா் அழைப்பு

News image
Updated On :20 மே 2026, 1:08 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இசையில் ஆா்வமுள்ளோா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சோ்ந்து பல்வேறு அரசு உதவித் தொகை மற்றும் சலுகைகளுடன் இசை பயில மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை நரிமேடு லட்சுமிநகரிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான இருபாலா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

குரலிசை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம் ஆகிய பயிற்சிகளுக்கு குறைந்தபட்சம் 7-ஆம் வகுப்பு தோ்ச்சியும், நாதசுரம், தவில், தேவாரம் ஆகியவற்றைப் பயில எழுதப்படிக்கத் தெரிந்தாலும் போதுமானது.

12 முதல் 25 வயதுக்குள்பட்டோா் சேரலாம். 3 ஆண்டுகள், தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெறும். ஆண்டுக்கு ரூ. 350 மட்டுமே கட்டணம்.

அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்.

இலவசப் பேருந்து பயணம், தங்கும் வசதி, கல்வி உதவித் தொகை ஆகியவை அரசு விதிகளுக்குள்பட்டு வழங்கப்படும். மேலும், மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

ஆா்வமுள்ளோா் சோ்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04322-225575, 99766-89383 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.