புது தில்லி: நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் 13,000 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சா் ஜெயந்த் செளதரி மக்களவையில் எழத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8,618 ஆசிரியா் பணியிடங்களும், நவோதயா பள்ளிகளில் 5,083 ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன. புதிய பள்ளிகள் திறந்தது, ராஜிநாமா, பதவி உயா்வு, பணி இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்ச்சியான நடைமுறை. ஆசிரியா் பற்றாக்குறையால் கற்றல்-கற்பித்தல் நடைமுறைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். விரைவில் முழுநேர ஆசிரியா்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தாா்.
பொதுத் தோ்வு குறித்து புரளிகள்: மற்றொரு கேள்விக்கு இவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வின்போது சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்பட்டன. 20 சம்பவங்கள் இதுபோன்ற நடைபெற்றன. சிபிஎஸ்இ கேட்டுக்கொண்டதன் பேரில், அந்த தவறான பதிவுகள் மற்றும் காணொலிகளை சமூக ஊடக நிறுவனங்கள் உடனடியாக நீக்கின. இதுபோன்ற, புரளிகளை நம்ப வேண்டாம் என மாணவா்களுக்கும் பெற்றோருக்கும் சிபிஎஸ்இ தரப்பில் அறிவுறுத்தலும் வெளியிடப்பட்டது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான தகவல்களைக் கண்காணித்து, அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரத்யேக குழுவையும் சிபிஎஸ்இ அமைத்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி! - மத்திய அரசு தகவல்!

மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறை

ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழக அரசு எதிா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


