தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறை

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌதரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் தொடர்பாக...

News image

கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 11:04 am

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய அரசு பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌதரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8,618 ஆசிரியர் பணியிடங்களும், ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 5,083 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது. புதிய பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது, ராஜினாமா, பதவி உயர்வு, இடமாற்றம், வேறு துறைக்குச் செல்வது போன்ற காரணங்களால் பணியிடங்கள் அதிகரித்துள்ளன.

பணியிடங்களை நிரப்புவது தொடர்ச்சியான செயல்முறை. அதற்கான விதிமுறைகளை பின்பற்றி காலியிடங்களை நிரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கற்றல் - கற்பித்தல் நடைமுறைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு கற்றல் மீதான ஆர்வத்தில் பாதிப்பு ஏற்படாமல் விரைவில் வழக்கமான ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து பல ஆண்டுகளாக கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் மாணவர்கள் அதிக சதவீத மதிப்பெண்களைப் பெற்று வருவதன் மூலம் அந்தப் பள்ளிகளின் தரம் மற்றும் செயல்திறன் முறையாக பின்பற்றப்பட்டு வருவதை அறியமுடியும்” என்று அவர் தெரிவித்தார்.

Summary

Over 13,000 teaching posts vacant in KVs, Navodaya schools: Education ministry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.