திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

+2 படித்தவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு!

இந்திய ராணுவத்தில் அதிகாரிப் பணிகளுக்கான 394 காலியிடங்கள் அறிவிப்பு குறித்து...

News image

+2 படித்தவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி - யுபிஎஸ்சி

Updated On :6 ஜூன் 2026, 1:22 pm IST

இந்திய ராணுவத்தில் அதிகாரிப் பணிகளுக்கான 394 காலியிடங்கள் குறித்த மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள திருமணமாகாத ஆண், பெண் இந்திய இளைஞர்கள் இருபாலர்களிடமிருந்தும் வரும் 9 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிவிப்பு எண்.: 10/2026 -NDA-II

தேர்வின் பெயர்: National Defence Academy & Naval Academy Examination-II,2026

மொத்த காலியிடங்கள்: 394

வயது வரம்பு: 1.1.2008-க்கும் 1.1.2011-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: National Defence Academy பணிக்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படை மற்றும் விமானப்படை பணிக்கு இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் அறிவுக்கூர்மை மற்றும் ஆளுமைத் தேர்வு குறித்த நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

கணிதம் மற்றும் பொது அறிவு பாடப்பிரிவுகளிலிருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.9.2026.

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர்

நேர்முகத்தேர்வு நடை பெறும் மாதம்: ஜூன் 2027.

எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளவும்.

நேர்முகத்தேர்வில் தேர்வாகிறவர்களுக்கு அதிகாரிப் பணிக்கான பயிற்சியுடன் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அதிகாரிப்பணி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய உடற்தகுதி, மருத்துவத்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் பற்றிய முழு விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.upsc online.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.6.2026.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

All the candidates are requested to carefully read the Rules of National Defence Academy and Naval Academy Examination-II, 2026 notified by the Government (Ministry of Defence) and this Notice of Examination derived from these Rules.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.