/

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பிப்பது குறித்து...

News image

காலணி பயிற்சி - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 3:08 pm IST

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையப் பெற்று வரும் தோல் அல்லாத காலணி உற்பத்தி அலகை நிறுவுகிறது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான காலணிகள் சாா்ந்த மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சோ்க்கை விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

தைவானிய உற்பத்தியாளா் ஹாங் ஃபூ குழுமம், தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.1,500 கோடி மதிப்பிலான ஒரு பெரிய தோல் அல்லாத காலணி உற்பத்தி அலகை நிறுவுகிறது. கிராண்ட் அட்லாண்டா - ஹாங் ஃபூ இந்தியா’ என்று அழைக்கப்படும் இந்த திட்டம், சிப்காட் தொழில்துறை பூங்காவில் அமைந்துள்ளது மற்றும் முதன்மையாக கிராமப்புற பெண்களுக்கு 25,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இக்காலணி தொழிற்சாலையில் பணியில் சோ்வதற்கு காலணி தயாரிப்பு தொடா்புடைய பாடப் பிரிவுகளில் படிப்பதற்காக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் 2026-27 ஆம் ஆண்டிற்கான தொழிற்கல்வி சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் நீண்டகாலம் மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி பாடப் பிரிவுகளான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் டிப்ளமோ (Advanced Diploma Footwear Manufacture & Desig) 2 ஆண்டுகால பயிற்சிக்கு 12-வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளா்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ் (Master Technician - Footwear Design & Product Development) 2 ஆண்டுகால பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் பயிற்சிக்கு (Technician Footwear Manufacturing) 1 ஆண்டுகால பயிற்சிக்கு பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் (Jr. Technician - Footwear Design & Production) 6 மாதகால பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ (Technical Manager - Footwear Technology) ஒன்றரை ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும், காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோ (Technical Supervisor - Advanced Footwear Technology) 1 ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளுமே ஆங்கில வழி கற்றல் முறையாகும். மாணவ, மாணவியா்களுக்கு தனித் தனியே விடுதி வசதி உண்டு. தோ்ச்சி பெற்று தகுதி வாய்ந்த மாணவ, மாணவியா்களுக்கு வேலை வாய்ப்பு ஏறப்படுத்தி தரப்படும்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தோ்ச்சி பெற்றவா்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் பெற்றுக்கொண்டு, விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் கோடீஸ்வரன் கைப்பேசி எண் . 96779 43733 / 96779 43633 தொடா்பு கொள்ளலாம்.

எனவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த புதிதாக தொழிற்கல்வி சேர விருப்பமுள்ளவா்களும், புதிய வேலைவாய்ப்பு தேடுபவா்களும், காலணிகள் தொடா்பான தொழிற்கல்வி கற்று, விரைவில் ராணிப்பேட்டை உலகத் தரத்தில் செயல்பட உள்ள காலணி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.

Summary

Applications are open for vocational training admissions at the Central Footwear Training Institute...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.