வங்கிகளின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) காலியாக உள்ள 650 உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய இரண்டு கட்ட போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் மார்ச் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்...
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 650
சம்பளம்: மாதம் ரூ.58,514
தகுதி: 1.2.2026 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.2.2026 தேதியின்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2.2.1998-க்கு முன்போ, 1.2.2006-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்க கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறன் பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, அதைத் தொடர்ந்து மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். வினாத்தாள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் அமைந்திருக்கும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடம்: முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் புதுச்சேரி
முதன்மைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், மதுரை, சேலம் மற்றும் புதுச்சேரி.
தேர்வு நடைபெறும் நாள்: தோராயமாக முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 11, முதன்மைத் தேர்வு ஜூன் 7 ஆம் தேதி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறன் பிரிவினருக்கு ரூ.50, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.450. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.3.2026
விண்ணப்பிப்போரின் முழுமையான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Reserve Bank of India Applications are invited from eligible candidates for 650 posts of ‘Assistant’ in the Reserve Bank of India, hereinafter referred to as 'the Bank’. Selection for the post will be through a country-wide competitive examination in two phases i.e., Preliminary and Main Examination, followed by a Language Proficiency Test (LPT)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய அரசில் 3,000 காலியிடங்கள் அறிவிப்பு!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாலுமிப் பணி!

இர்கான் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


