இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை ராணுவத்தில்(சாஸ்திர சீமா பால்) காலியாக உள்ள 223 தலைமை காவலர் (ஸ்டீவர்ட்), தலைமை காவலர் (தகவல் தொடர்பு), தலைமை காவலர் (மின் பணியாளர்) மற்றும் தலைமை காவலர் (கால்நடை) ஆகிய குரூப் 'சி'பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். 524 / RC/SSB/Combined Advt/CT to SI (Non-GD)/2025
பணி: Head Constable (Steward)
காலியிடங்கள்: 2
சம்பள: மாதம் ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் catering and Kitchen Management படிப்பில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ முடித்து 1 ஆண்டு Steward-ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி : ஆண்கள் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 155 செ.மீ.உயரமும் பெற்றிருக்க வேண்டும், ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ. அகலமும், விரிவடைந்த நிலையில் 80 செ.மீ. அகலமும் இருக்க வேண்டும்.
பணி: Head Constable (Electrician)
காலியிடங்கள்: 29
சம்பளம்: ரூ.25,500 - 81,100
வயது: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician டிரேடில் ஐடிஐ முடித்து தொழில்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: HeadConstable(Communication)
காலியிடங்கள்: 197
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதப் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் ஐடி, இஇஇ, சிஎஸ்இ, இசிஇ பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Head Constable (Veterinary)
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: உயிரியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் Veterinary and Livestock Development, Animal Husbandry பிரிவில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஆண்கள் 170 செ.மீ. உயரமும். பெண்கள் 157 செ.மீ. உயரமும் பெற்றிருக்க வேண்டும். ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ. அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. அகலமும் இருக்க வேண்டும்.
உடற்திறன்: ஆண்கள் 1.6 கி.மீ. தூரத்தை 6½ நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட் டர் தூரத்தை 4 நிமிடங்களிலும் ஓடி கடக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற் தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் எஸ்எஸ்பியால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
மேற்கண்ட தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதை பதிவிறக்கம் செய்து தேர்வில் கலந்து கொள்ளவும். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Online applications are invited for up the posts Head Constable in Group 'C'Non-Gazetted & Non ministerial in Sashastra Seema Bal, Ministry of Home Affairs, Government of India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் டிரெய்னி பணி!

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: விண்ணப்பிக்க தகுதி என்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



