இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.40,000 - ரூ.1,40,000
வயது வரம்பு: 21 -லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், கணினி மற்றும் தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager,Technical (Database Administration)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000
வயது வரம்பு: 23-லிருந்து 31-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல் மற்றும் டெலிகாம், கணினி அறிவியல், கணினி மற்றும் தகவல் தொடர்பியல், தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல் ஆகிய ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Manager(Technical (System Administration)
காலியிடங்கள்: 2 (SC-1, EWS-1)
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயது வரம்பு: 27-லிருந்து 34-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், கணினி மற்றும் தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் கருவியியல் ஆகிய ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 6ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 1,200. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.600. இதனை "RailTel Corporation of India Limited", New Delhi என்ற புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் வங்கிவரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப தபால் கவர் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.Deputy General Manager/HR,RailTel Corporation of India Ltd., Plate-A, 6th Floor, Office Block-II, East Kidwai Nagar,New Delhi - 110 023.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.4.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Notice For Regular Recruitment in Technical Department of RailTel Corporation including backlog vacancies for Data Centre Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



